Author
William H McRaven
அட்மிரல் வில்லியம் எச். மெக்ரேவன், அமெரிக்கக் கடற்படையில் ஓர் அட்மிரலாக இருந்து ஓய்வு பெற்றவர். அவருடைய ‘உங்கள் படுக்கையை மடித்து வையுங்கள்’ நூல், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை தொகுத்து வழங்குகின்ற, மிகச் சிறப்பாக விற்பனையாகின்ற நூல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது. இந்நூல் தவிர மேலும் இரண்டு பிரபலமான நூல்களையும் அவர் எழுதியுள்ளார். அவர் ஒரு நேவி சீல் வீரராகப் பணியாற்றியிருந்த 37 ஆண்டுகளில், அந்த அமைப்பின் அனைத்துத் தளங்களிலும் தலைமையேற்றுப் பணியாற்றியுள்ளார். ஒரு நான்கு நட்சத்திர அட்மிரல் என்ற முறையில், இறுதியாக அவர் அமெரிக்காவின் அனைத்துச் சிறப்புப் பிரிவுகளின் தளபதியாகப் பணியாற்றியிருந்தார். இராணுவப் பணியிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகு, 2015லிருந்து 2018 வரை, டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தராக அவர் பணியாற்றினார். இப்போது அவர் ஆஸ்டின் நகரில் தன் மனைவி ஜார்ஜீனுடன் வசித்து வருகிறார்.l